கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவை காண வந்த இளைஞர் கொலை? போலீசார் குவிப்பு… பதற்றம்.. பரபரப்பு!!!

Author: Udayachandran RadhaKrishnan
5 May 2023, 9:47 am

மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் பகுதி அருகே இன்று அதிகாலை 3 மணிக்கு மேல் மதுரை ஜெய்ஹிந்த்புரம் அருகே உள்ள எம் கே புரத்தை சேர்ந்த ராஜரத்தினம் என்பவருடைய மகன் சூர்யா என்பவர் அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா நடைபெறும் பகுதி அருகே அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கழுத்தில் துண்டால் நெறித்தும், உடல் முழுவதும் மிதித்தும்,வலது நெற்றியில் ரத்த காயம் ஏற்படும் வகையில் தாக்கியும் கொலை செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து மதிச்சியம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு கொலை சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலைக்கான காரணம் மற்றும் கொலை செய்த நபர்கள் பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ