விராட் கோலி காலில் இப்படி ஒரு பிரச்சனையா…வெளிவந்த புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்..!
Author: Selvan31 December 2024, 7:45 pm
விராட் கோலி காலில் ஆறு விரலா ..!
உலக அளவில் இருக்கக்கூடிய கிரிக்கெட் ரசிகர்களை தன்னுடைய பேட்டிங்கால் கவர்ந்து வருபவர் விராட்கோலி .இவரை ரசிகர்கள் கிங் கோலி என்று அழைத்து வருகிறார்கள்.இந்த நிலையில் இந்திய ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
இதில் விராட்கோலி வழக்கம் போல ஆப் சைடு போடப்பட்ட பந்தை அடிக்க முயற்சி செய்து அவுட் ஆகி,தொடர் சரிவை சந்தித்து வருகிறார்.இந்த சூழலில் அவரை பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்க: மீண்டும் சொதப்பிய ரோஹித்,கோலி…படு தோல்வியில் இந்திய அணி..WTC FINALS கேள்வி குறி..!
கடந்த 4-வது டெஸ்ட் போட்டியின் போது நிதிஷ் குமார் ரெட்டி தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்தார்.அப்போது நிதிஷ் மற்றும் அவருடடைய குடும்பம் விராட்கோலியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது.
Why does it appear like he has 6 toes in his both feets ? https://t.co/DraNwAODJl pic.twitter.com/lBtATOpQYY
— ŁŐĞÀÑ ␥ (@Pakratkohli) December 29, 2024
அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பரவிய நிலையில் அதில் விராட்கோலி காலின் ஒரு பகுதியில் ஆறு விரல்கள் இருப்பதை பார்த்து ஆச்சர்யம் அடைந்து வருகின்றனர்.