“ஹலோ” என்றதும் கட் ஆன கனெக்சன் : ரேட் பிக்ஸ் பண்ணிய APP-ல் மோசடி செய்யும் கிரண்.? பரபரப்பு புகார்.!

Author: Rajesh
4 July 2022, 11:00 am

தமிழில் ஜெமினி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கிரண் அதை தொடர்ந்து வின்னர், அன்பே சிவம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். முன்னணி நடிகர்கள் பலருக்கும் ஜோடியாக நடித்திருக்கும் இவர் சில காலங்களுக்கு பிறகு சினிமா வாய்ப்புகள் குறையவே சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார்.

அதன் பிறகு சில திரைப்படங்களில் தலைகாட்டி வந்த இவர் சமீப காலமாக தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பயங்கர ஆக்டிவாக இருந்து வருகிறார். மேலும் இளம் நடிகைகளுக்கே சவால் விடும் வகையில் இவர் தன்னுடைய ஓவர் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

இதனால் இவருக்கு சோசியல் மீடியாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த கவர்ச்சியை இவர் தற்போது பிசினஸ் ஆக மாற்றி விட்டார். அதாவது இவரிடம் ரசிகர்கள் பேசுவதற்காக தனி ஆண்ட்ராய்டு ஆப் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

அதில் இவர் தன்னுடைய எல்லை மீறிய கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். ரசிகர்கள் அதை பார்க்க வேண்டும் என்றால் தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். முதலில் அந்த ஆப்பில் நுழைவதற்கு ஒருவர் ரூபாய் 49 கட்டணமாக செலுத்த வேண்டும்.

அதைத் தொடர்ந்து கிரனுடன் ஐந்து நிமிடங்கள் பேச வேண்டும் என்றால் ரூபாய் 5000 செலுத்த வேண்டும். வீடியோ காலில் பேச வேண்டும் என்றால் 25 ஆயிரம் செலுத்த வேண்டும். அது மட்டுமல்லாமல் இவரை நேரில் சந்திக்க வேண்டும் என்றால் 1.5 லட்சம் கொடுக்க வேண்டும் என்று அவர் தனித்தனியாக ரேட் பிக்ஸ் செய்துள்ளார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் அந்த ஆப்பில் சென்று அதற்கான பணத்தை செலுத்துகின்றனர். இதே போன்று தான் ஒருவர் வீடியோ காலில் பேசுவதற்காக 25 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி இருக்கிறார். ஆனால் கால் எதுவும் வரவில்லையாம்.

மேலும் ஆடியோ காலில் பேசுவதற்காக பணம் கட்டியிருந்த அந்த நபர் ஹலோ என்று சொன்னதுமே இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டதாம். இப்படி கிரண் தன்னை நம்பி பணம் செலுத்தியவர்களை ஏமாற்றி வருவதாக ஒரு தகவல் எழுந்துள்ளது.

இதனால் கொதிப்படைந்த ரசிகர்கள் அந்த ஆப்பை முடக்க வேண்டும் என்றும், அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை பிளாக் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க உண்மையில் அது கிரணின் இன்ஸ்டாகிராம் பக்கம் தானா என்ற ஒரு கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றன. தற்போது கிரண் செய்யும் இந்த மோசடி வேலையை பற்றி தான் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 1304

    9

    3