பட்டம் பற பற… புதுச்சேரியில் முதல் முறையாக கடற்கரையில் காத்தாடி திருவிழா..!
Author: Vignesh24 August 2024, 1:23 pm
புதுச்சேரி அரசின் சுற்றுலாத்துறை சார்பில் சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரையில் காத்தாடி திருவிழா இன்று துவங்கி மூன்று நாட்கள் நடத்துகிறது.
டால்பின்கள், குதிரை, பூனை, சுறாமீன், நீலத்திமிங்கலம்,பட்டாம்பூச்சி, தங்க மீன்கள், பாம்பு, கரடி,மிக்கி மவுஸ், ஆக்டோபஸ், கொரில்லா என 250க்கும் மேற்பட்ட காத்தாடிகளை வானத்தில் பறக்க விட்டு வண்ணமயமான கடற்கரையாக அலங்கரிப்பு
புதுச்சேரி சுற்றுலாவை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதுச்சேரி என்றாலே பல வகையான மதுபானங்களும் பிரென்ச் ஆட்சி காலத்தில் பயன்படுத்தப்பட்ட மது வகைகளும் பறந்து விரிந்து காணப்படுகிறது. இதற்காகவே பல்வேறு நாடுகளில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் புதுச்சேரிக்கு அதிகளவில் மது பிரியர்களும் சுற்றுலாப் பயணிகளும் வருகை தருகின்றனர். இது மட்டும் இல்லாமல் புதுச்சேரி கடற்கரைப் பகுதி 16 கிலோமீட்டர் தூரத்திற்கு மணல் பரப்பால் அமைந்துள்ளது.
கடற்கரைப் பகுதியை மிகப்பெரிய சுற்றுலாத்தலமாக உருவாக்க அரசு தனியார் பங்களிப்புடன் மெரினா கடற்கரை, பாரடைஸ் பீச், ஈடன் பீச், போன்ற ஐந்துக்கும் மேற்பட்ட கடற்கரையை உருவாக்கியுள்ளது. இங்கு உணவு வகைகள், சிறுவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், பொழுதுபோக்கு பூங்கா உள்ளிட்டவை நிறுவப்பட்டுள்ளது இதனால் நாளுக்கு நாள் புதுச்சேரிக்கு சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரித்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து வார இறுதி நாட்களில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விப்பதற்காக பல்வேறு கலாச்சார நிகழ்வுகளும் கடற்கரைப் பகுதியில் நடத்தப்பட்டு வருகிறது இந்த வகையில் புதுச்சேரி சின்னா விரும்பட்டினம் அருகே உள்ள ஈடன் கடற்கரையில் மிகப் பிரம்மாண்டமான காத்தாடி திருவிழா புதுச்சேரி சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்து நடத்தியது.
இந்த காத்தாடி திருவிழாவை சபாநாயகர் செல்வம் தொடங்கி வைத்தார்.பிரான்ஸ், ஜெர்மனி, தாய்லாந்து, மலேசியா, சுவிட்சர்லாந்து, வியட்நாம் மற்றும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் சர்வதேச காத்தாடி அணிகளைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட காத்தாடி விடும் வீரர்கள் கலந்து கொண்டு, டால்பின்கள், குதிரை, பூனை, சுறாமீன், நீலத்திமிங்கலம்,பட்டாம்பூச்சி, தங்க மீன்கள், பாம்பு, கரடி,மிக்கி மவுஸ், ஆக்டோபஸ், கொரில்லா என 250க்கும் மேற்பட்ட காத்தாடிகளை வானத்தில் பறக்க விட்டு வண்ணமயமான கடற்கரையாக அலங்கரித்தனர்.
வார இறுதி நாள் என்பதால் அதிக அளவில் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் காத்தாடி திருவிழாவை கண்டுகளித்தனர்.கார்ட்டூன் கதாபாத்திரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் என, வெவ்வேறு வடிவ காத்தாடிகள், கண்கவர் வண்ணங்களில், நீலவான பின்னணியில் வானில் பறந்து பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது…
புதுச்சேரியில் சுற்றுலா வளர்ச்சி நடவடிக்கைகள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது கடற்கரையில் காத்தாடி திருவிழா நடத்தப்படுவது மிக மகிழ்ச்சி அளிக்கிறது. புதுச்சேரியில் சுற்றுலாத் திட்டங்கள் அதிக அளவில் இருப்பதினால் அதிகமாக விரும்பி வரும் பகுதியாக உள்ளது என்று சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர்
அடுத்து இரண்டு நாட்களும் சின்ன வீராம்பட்டினத்தில் கடற்கரை பகுதியில் காத்தாடி திருவிழா நடைபெறுகிறது. பொது மக்களும் சுற்றுலா பயணிகளும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.தொடர்ந்து காத்தாடி திருவிழாவை அரசு நடத்தும் என சபாநாயகர் செல்வம் கூறினார்.
0
0