தருமபுரியில் SIPCOT, பின்னலாடை நிறுவனம்.. : பெண்கள் மத்தியில் வாக்குறுதி கொடுத்த சௌமியா அன்புமணி.!!

Author: Udayachandran RadhaKrishnan
9 April 2024, 11:54 am

தருமபுரியில் SIPCOT, பின்னலாடை நிறுவனம்.. : பெண்கள் மத்தியில் வாக்குறுதி கொடுத்த சௌமியா அன்புமணி.!!

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக சார்பில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சௌமியா அன்புமணி தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

செல்லம்பட்டி புதூர் கிராமத்தில் பரப்புரையை துவங்கிய அவர் அரூர் நகரப் பகுதியில் கடைவீதியில் நடந்து சென்று தீவிர வாக்கு சேகரித்தார்.

மாவேரிப்பட்டி, பொய்யப்பட்டி, பெரிய பண்ணை முடிவு உள்ளிட்ட கிராமங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது மக்களிடையே பேசிய அவர் அரூர் பகுதியில் பெண்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் பின்னலாடை நிறுவனங்கள் அமைக்க முயற்சி எடுப்பேன்.

காவிரி உபநீர் திட்டத்தை நிறைவேற்ற மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் தருமபுரி மாவட்டத்தில் நிகழும் வேலை வாய்ப்பு பிரச்சினையை தீர்க்க சிப்காட் அமைத்து தொழிற்சாலைகள் அமைக்க பாடுபடுவேன் என்றார்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?