இரவு நேரங்களில் கதவுகளை தட்டும் சத்தம்… காணாமல் போகும் கால்நடைகள்… மர்மத்தை கண்டுபிடிக்க கோரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
3 July 2023, 7:47 pm

தருமபுரி அருகே இலக்கியம்பட்டி கீழ் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:- தருமபுரி அருகே இலக்கியம்பட்டி பகுதியில் தொடர்ந்து இரவு நேரங்களில் மர்ம நபர்கள் வீடுகளின் கதவுகளை தட்டுகின்றனர்.

இதனால் அந்த நேரத்தில் வீடுகளை யாரும் திறப்பதில்லை. ஏற்கனவே இரண்டு நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனம் ஒன்று திருடுபோய் உள்ளது.

இதனை தொடர்ந்து எங்கள் குடும்பத்துடன் உறவினர் திருமணத்திற்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினோம். அப்போது வீட்டில் இருந்த என்னுடைய வளர்ப்பு நாயை காணவில்லை. இதனால் பல இடங்களில் தேடி பார்த்தேன். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை.

இந்த பகுதியில் மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இளைஞர் தன் பாசமுள்ள வளர்ப்பு நாயின் புகைப்படத்தை போஸ்டர் பிரிண்ட் செய்து இலக்கியம்பட்டி பகுதியில் உள்ள காமவுண்டு சுவர்களில் ஒட்டி விளம்பரப்படுத்தி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!