சூடுபிடித்த கோச்சடையான் வழக்கு.. லதா ரஜினிகாந்துக்கு போட்ட பிடிவாரண்ட் : கோர்ட் போட்ட உத்தரவு!!
நடிகர் ரஜினிகாந்தின் கோச்சடையான் படம் கடந்த 2014ம் ஆண்டில் அவரது இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியானது. படத்தை மீடியா ஒன் என்டர்டெயின்மெண்ட் சார்பில் முரளி தயாரித்திருந்தார்.
இந்தப் படத்தின் தயாரிப்பிற்காக அவர் ஆட் பீரோ நிறுவனத்தின் சார்பில் அபிர்சந்த் நஹாவர் என்பவரிடம் 6.2 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார். இதற்கு நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் உத்தரவாத கையெழுத்திட்டுள்ளார். இதில் அந்தப் படத்தை முரளி செட்டில் செய்யாத நிலையில், லதா ரஜினிகாந்த் மீது மோசடி புகார் அளிக்கப்பட்டது.
படமும் லாபம் ஈட்டாத நிலையில் 6.2 கோடியை திருப்பி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது இதனால் லதா ரஜினிகாந்த் மீது 4 பிரிவுகளில் மோசடி புகார்கொடுக்கப்பட்டு பெங்களூரு நீதிமன்றத்தில் நடைபெற்றது. சுமார் 8 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
4 பிரிவுகளில் 3 வழக்குகள் கர்நாடக நீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவால் ரத்து செய்யப்பட்டன. இதையத்து ஒரு வழக்கு விசாரணையில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று லதா ரஜினிகாந்த் நேரில் ஆஜரானார்.
இந்த மோசடி வழக்கில், லதா ரஜினிகாந்த் மீது தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரு கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இப்பொது, பிடிவாரண்டை ரத்து செய்யக் கோரி லதா ரஜினிகாந்த் ஆஜரான நிலையில், அவருக்கு முன்ஜாமின் வழங்கி, வழக்கு விசாரணையை ஜனவரி 6ம் தேதிக்கு ஒத்திவைத்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கிற்கும் தனக்கும் தாடர்பில்லை என்றும், வழக்கில் இருந்து விடுவிக்க கோரி லதா ரஜினிகாந்த் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்ய உள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
முன்னதால் முக்காடு போட்டபடி நீதிமன்றத்தல் லதா ரஜினிகாந்த் ஆஜரானார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இது ட்ரோலாக மாறி நெட்டிசன்கள் கையில் சிக்கியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…
சச்சின் ரீரிலீஸ் 2005 ஆம் ஆண்டு விஜய் கதாநாயகனாக நடித்து வெளியான “சச்சின்” திரைப்படம் கடந்த 18 ஆம் தேதி…
ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிகர் மகேஷ்பாபு நடித்திருந்தார். இதையும்…
சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
This website uses cookies.