காருக்குள் இளம்பெண்ணுடன் ஐடி ஊழியர்கள் செய்த வேலை… சோதனைச்சாவடியில் டுவிஸ்ட்!

Author: Udayachandran RadhaKrishnan
2 January 2025, 4:16 pm

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் புத்தாண்டு விடுமுறையை கொண்டாடுவதற்காக சுற்றுலாப் பயணிகளின் குவிந்தனர். இதனால் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் சந்தேகப்படும் வகையில் வந்த கேரள மாநில பதிவு எண் கொண்ட காரை நிறுத்தி விசாரித்தனர்.

இதில் அவர்கள் கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த ரஞ்சிஸ் (27), முகமது நசீர் (24), ஜிஷ்ணு (22), அசாம் மாநிலத்தை சேர்ந்த பிரதிக்‌ஷா (25) என்பதும், பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்ததும் தெரிந்தது.

3 Youths and woman arrest

தொடர்ந்து விசாரித்தபோது காரில் இருந்தபடி ஒருவர் ஒரு பொட்டலத்தை வெளியில் தூக்கி எறிந்தார். போலீசார் அதை எடுத்து பிரித்து பார்த்த போது பல லட்சம் மதிப்புள்ள உயர்ரக மெத்தபெட்டமைன் போதை பொருள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போதை பொருள், காரை பறிமுதல் செய்து 4 பேரையும் கைது செய்தனர்.

இதையும் படியுங்க: கருத்து வேறுபாடுலாம் இல்ல.. ஆனால், அவர்தான் தலைவர்.. அடித்துக்கூறும் ராமதாஸ்!

இந்த போதை பொருள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது, யாரிடம் வாங்கினார்கள், இவர்களுடன் வேறு யார் தொடர்பில் உள்ளனர் என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Kodaikanal Including Woman 4 youths Arrest

இந்த வழக்கை கொடைக்கானல் காவல் துணை கண்காணிப்பாளர் மதுமதி , காவல் ஆய்வாளர் பாஸ்கரன் , போக்குவரத்து சார்பு ஆய்வாளர் முத்துராம லிங்கம் உள்ளிட்ட காவலர்கள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு உள்ளனர் .

  • Joshua Sridhar music journey இதெல்லாம் ஒரு இசையா…காது கொடுத்து கேட்க முடியல…பிரபல இசையமைப்பாளர் கொந்தளிப்பு..!
  • Views: - 121

    0

    0

    Leave a Reply