‘தரமற்ற விதைகளை கொடுக்கறாங்க.. நஷ்டம் தான் ஆகுது’ ; அரசு தோட்டக்கலைத்துறை மீது விவசாயிகள் புகார்…!!
Author: Babu Lakshmanan21 March 2023, 5:04 pm
கொடைக்கானலில் தோட்டக்கலைத்துறை மூலமாக வழங்கப்பட்ட விதைகள் தரம் அற்று இருப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டுகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பெரும்பாலான மக்கள், விவசாயமே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். மேல்மலை மற்றும் கீழ் மலை கிராமங்களில் விவசாயம் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது.
இந்த சூழலில் கொடைக்கானல் மலைப்பகுதியில் பிரதான காய்கறிகளான கேரட், பீன்ஸ், அவரை, முட்டைக்கோஸ், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகள் அதிகம் விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சூழலில் கொடைக்கானல் மலைப்பகுதியில் தோட்டக்கலைத் துறை மூலமாக மானிய விலையில் விதைகள் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வழங்கப்படும் விதைகள் தரமற்று இருப்பதாகவும், மண்ணின் தன்மைக்கு ஏற்ற விதைகளாக இல்லாமல் இருப்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும், அவர்கள் வழங்கும் விதைகள் பயிரிடும் போது பயிர்கள் சேதமடைந்து வருவதாகவும் விவசாயிகள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். எனவே, மண்ணின் தன்மைக்கு ஏற்ப உரிய விதைகளை தோட்டக்கலைத் துறையினர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.