கொடைக்கானலில் கொட்டும் உறை பனி.. இயற்கையின் அழகை காண முடியாமல் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம்…

Author: Babu Lakshmanan
10 January 2023, 10:18 am

திண்டுக்கல் : கொடைக்கானலில் அதிகரித்த உறை பனியால் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சுற்றுலாத் தலமான கொடைக்கானலில் வருடா வருடம் டிசம்பர் முதல் வாரத்திலேயே உறைபனி துவங்கும். தொடர் மழை காரணமாக கடந்த மாதம் துவங்க வேண்டிய பணி துவங்காமல் காலம் தாழ்த்தி டிசம்பர் கடைசி நாட்களில் இருந்து ஜனவரி பிறந்தவுடன் பனியானது அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாகவே சுமார் ஐந்து டிகிரி கீழ் உரை பனி சென்றதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் பொதுமக்கள் வீட்டில் உறங்க முடியாத அளவிற்கு பாம்பார்புரம், கீழ் பூமி, மேல்மலை பகுதியான பூம்பாறை, தூண்டி, கவுன்சி, கூக்கால் மற்றும் நட்சத்திர ஏரி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உறைபனி தற்போது கொட்டி வருகிறது.

மேலும், வரும் நாட்களில் அதிக அளவு பனி இருக்கும் எனக் கூறப்படுகிறது. பகல் நேரங்களில் அதிகளவு வெயிலின் தாக்கமும், மாலை 4 மணிக்கு பனி பொழிவு துவங்கி இரவு நேரத்தில் அதிக அளவு பனிப்பொழிவு உள்ளது. காலை 10 மணி முதல் 11 மணி வரை பனிப்பொழிவு உள்ளதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுற்றுலா பயணிகளும், சுற்றுலாத் தலங்களை காண்பதற்கு முடியாத நிலையில் ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் டிசம்பர் மாதத்தில் வருவது வழக்கம். தற்போது உறை பனியை ரசிப்பதற்காக சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மேலும், மலைப்பாதைகளில் பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்ட முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

  • abhirami spoke in tamil in thug life movie press meet இங்கிலிஷா? நோ- தக் லைஃப் விழாவில் தக் லைஃப் காட்டிய அபிராமி! குவியும் பாராட்டுக்கள்