‘உன்னோட டைமிங் என்ன..?’… பேருந்தை இயக்குவதில் மோதல் ; செருப்பால் அடித்துக் கொண்ட அரசுப் பேருந்து ஓட்டுநர்கள்…!!

Author: Babu Lakshmanan
14 October 2023, 11:08 am

கொடைக்கானலில் பேருந்துகள் இயக்குவதில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

திண்டுக்கல் கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து மதுரைக்கு ஏசி அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. கொடைக்கானலில் இருந்து மதுரைக்கு சாதாரண அரசு பேருந்தும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏசி அரசு பேருந்து ஓட்டுனர் அந்த பேருந்தை தாமதமாக இயக்கி வருவதாக கூறப்படுகிறது.

தாமதமாக பேருந்தை இயக்குவதால் அடுத்து உள்ள அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துநர் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.

‘உங்களுடைய நேரத்திற்கு ஏன் ஏசி பேருந்தை இயக்கவில்லை என்று அடுத்து உள்ள அரசு பேருந்து ஓட்டுனரும், கண்டக்டரும் கேட்டுள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து செருப்புகளால் தாக்கி கொண்டதால் பரபரப்பும் ஏற்பட்டது.

அந்த நேரத்தில் கொடைக்கானல் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோர் இருந்த நிலையில், முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இரு தரப்பினரும் தாகத வார்த்தைகளை பேசி கேட்டு கொண்டனர். இது பற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 403

    0

    0