நொடியில் நடந்த சம்பவம்… காரை அப்பளம் போல நொறுக்கிய சரக்கு லாரி… கொடைக்கானல் மலை சாலையில் போக்குவரத்து பாதிப்பு..!!

Author: Babu Lakshmanan
17 May 2024, 4:00 pm

கொடைக்கானல் மலை சாலையில் நின்று கொண்டிருந்த கார் மீது லாரி மோதி சாலையில் கவிழ்ந்து விபத்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இன்று கொடைக்கானலுக்கு சென்ற சுற்றுலா பயணிகள் கார் ஒன்று பண்ணைக்காடு பிரிவு என்ற இடத்தில் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி காய்கறி ஏற்றி வந்த சரக்கு லாரி ஒன்று எதிர்பாராதமாக கார் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது.

மேலும் படிக்க: கோவை மத்திய சிறையில் பெலிக்ஸ் ஜெரால்டை அடைக்க உத்தரவு : மே 31 வரை காவல் நீட்டிப்பு!

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக லாரி மற்றும் காரில் இருந்தவர்கள் உயிர் தப்பினர். கொடைக்கானல் மலை சாலையில் லாரி கவிழ்ந்ததால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து நிகழ்விடத்திற்கு வந்த தாண்டிக்குடி போலீசார் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • ajith-sir-gives-the-title-good-bad-ugly-said-by-adhik-ravichandran டைட்டில் வச்சதே அஜித்சார்தான்- ஆச்சரிய தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்