கொடைக்கானலில் களைகட்டும் கோடை சீசன்.. பிரையண்ட் பூங்காவில் நடக்கும் மலர் கண்காட்சி குறித்த அறிவிப்பு வெளியீடு

Author: Babu Lakshmanan
12 May 2023, 5:45 pm

திண்டுக்கல் ; கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடக்கவிருக்கும் மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா குறித்த அறிவிப்பை வருவாய் கோட்டாட்சியர் ராஜா வெளியிட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சீசன் ஆரம்பித்து உள்ளது. தொடர்ந்து கொடைக்கானலில் பிரையண்ட் பூங்காவில் வருடந்தோறும் மலர் கண்காட்சியுடன் கோடை விழா நடைபெறும். இதற்காக தோட்டக்கலை துறை சார்பில் பூங்காவில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

தொடர்ந்து இந்த வருடம் மே மாத சீசன் ஆரம்பித்து உள்ள நிலையில், பிரையண்ட் பூங்காவில் 60வது மலர் கண்காட்சி 26ம் தேதி துவங்கி ஜூன் 2ம் தேதி வரை கோடைவிழாவுடன் 8 நாட்கள் நடைபெறும் கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் ராஜா தெரிவித்து உள்ளார். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடைபெறும் மலர்கண்காட்சி துவக்க விழாவில் ஊரக வளர்ச்சிதுறை துறை அமைச்சர் பெரியசாமி, சுற்றுலா துறை அமைச்சர் ராமசந்திரன், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 555

    0

    0