இந்த SUMMER-ஐ கொடைக்கானலில் கழிக்க திட்டமா..? கிளம்பறதுக்கு முன்பு இதை தெரிஞ்சுக்கோங்க ; சுற்றுலாப் பயணிகளுக்கான அப்டேட்..!!

Author: Babu Lakshmanan
8 April 2023, 1:33 pm

கொடைக்கானலில் தொடர் விடுமுறை எதிரொலியாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பால், 5 கி.மீட்டருக்கு மேல் வாகனங்கள் அணிவகுத்து கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். குறிப்பாக, தொடர்பு விடுமுறை தினம் என்பதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் படையெடுத்துள்ளனர்.

தொடர்ந்து, சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் கொடைக்கானல் மலைச்சாலை முழுவதிலுமாக கடும் போக்குவரத்து நெரிசலானது ஏற்பட்டு உள்ளது. பிரதான சாலைகளான வத்தலகுண்டு பிரதான சாலை, வெள்ளி நீர்வீழ்ச்சி சாலை, ஏரிச்சாலை, அப்சர்வேட்டரி சாலை, செண்பகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 5 கிமீ தொலைவு வரையில் கடும் போக்குவரத்து நெரிசலானது ஏற்பட்டது. இதன் காரணமாக வாகனங்கள் அணிவகுத்து மெல்ல ஊர்ந்து வருகிறது.

இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் சுற்றுலா இடங்களுக்கு செல்ல முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளாகினர். மேலும், சுற்றுலா பயணிகள் சில இடங்களில் நடந்து செல்லும் நிலை உள்ளது. கூடுதலாக போக்குவரத்து காவலர்கள் நியமிக்கப்படாததன் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

எனவே, தொடர் விடுமுறை என்பதாலும் சீசன் ஆரம்பிக்க உள்ள நிலைகள் கூடுதலாக காவலர்களை நியமிக்க வேண்டும் என்பதை அனைவரின் கோரிக்கையாகவும் இருந்து வருகிறது.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!