கொடைக்கானல் TRIP முடிந்தது… குடும்பத்தினருடன் குழந்தை வேலப்பர் கோவிலில் அண்ணாமலை தரிசனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 April 2024, 6:59 pm

கொடைக்கானல் TRIP முடிந்தது… குடும்பத்தினருடன் குழந்தை வேலப்பர் கோவிலில் அண்ணாமலை தரிசனம்!!

கடந்த 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்ததை முன்னிட்டு தமிழக பாஜக மாநில தலைவரும்,கோவை நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளருமான அண்ணாமலை திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கடந்த 25ஆம் தேதி வருகை புரிந்து பாம்பார்புரம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தனது குடும்பத்துடன் ஓய்வு எடுத்தார்.

இதனை தொடர்ந்து அவர் பாஜக நிர்வாகிகளையும் சந்திக்கவில்லை, இந்த நிலையில் இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் ஒன்றாக உள்ள பூம்பாறை மலைக்கிராமத்தில் 3000 ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ குழந்தை வேலப்பர் திருக்கோவிலில் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

சாமி தரிசனம் நிறைவடைந்த பின்பு கோவிலுக்கு வந்திருந்த சுற்றுலாப்பயணிகள் மற்றும் இப்பகுதி பொதுமக்கள் அவருடன் செல்ஃபி எடுத்து உற்சாகம் அடைந்தனர்.

மேலும் சுற்றுலாப்பயணிகள் தாங்களுக்கு தான் வெற்றி என கூற அண்ணாமலை பார்ப்போம் என்று கூறி வாகனத்தில் சென்றார்.

மேலும் பழனி சாலை மார்க்கமாக அண்ணாமலை கோயம்புத்தூர் செல்ல இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ