தரமான பதிலடி…மைதானத்தில் கோலி…ட்விட்டரில் அஸ்வின்…வாயடைத்து போன ஆஸி.ரசிகர்கள்..!

Author: Selvan
5 January 2025, 7:56 pm

உங்கள் வீரர்கள் மாதிரி நாங்க கிடையாது..!

இன்று சிட்னி மைதானத்தில் நடைபெற்ற இறுதி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்து,உலக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் செல்லும் வாய்ப்பை இழந்தது.

என்ன தான் இந்த தொடரில் இந்திய அணி மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்தாலும்,பும்ரா என்ற ஒற்றை வீரரை வைத்து ஆஸ்திரேலியா வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்தனர்.தன்னுடைய மிரட்டலான பௌலிங்கால் எதிரணி வீரர்களை திணறிடித்தார்.

Virat Kohli Sydney test controversy

இந்த சூழலில் அவருக்கு முதுகு வலி பிரச்சனை காரணமாக,இன்று நடந்த போட்டியில் விளையாடவில்லை,இந்த வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்தி மிக எளிதாக ஆஸ்திரேலியா அணி வெற்றிப்பெற்றார்கள்.

இந்த நிலையில் விறு விறுப்பாக சென்ற ஆட்டத்தில் ரசிகர்களை பார்த்து விராட்கோலி தன்னுடைய பேண்ட் பாக்கெட்டை வெளியே எடுத்து காட்டுவார்,மேலும் அவர் தன்னுடைய கையை காட்டி என் கையில் ஒன்றும் இல்லை என கூறுவார்.விராட் கோலி மைதானத்தில் இப்படி நடந்த விதத்தை பார்த்து ஆஸ்திரேலியா ரசிகர்கள் வாயடைத்து போனது மட்டுமின்றி ஆஸ்திரேலியா வீரர்களும் ஷாக் ஆனார்கள்.

அதாவது நேற்றைய போட்டியின் போது பும்ரா தனது ஷூவை கழற்றி மாற்றுவார் அப்போது அவரது ஷூவில் இருந்து கால் விரலை பாதுகாக்கும் உறை கீழே விழும் இதனை ஆஸி.ஊடகங்கள் இந்திய வீரர்கள் பந்தை சேதப்படுத்தி விக்கெட் எடுக்க முயற்சி செய்கின்றனர்,கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

அதேபோல மைதானத்தில் இருந்த ரசிகர்கள்,இந்திய வீரர்களை பார்த்து பந்தை சேதப்படுத்தி விக்கெட் எடுக்கின்றனர் என்று கோஷங்களை எழுப்பி வந்தனர்,இதனால் கோவம் அடைந்த விராட்கோலி,உங்கள் வீரர்கள் மாதிரி நாங்கள் கிடையாது என நேரடியாக தாக்கி இருப்பார்.

அவர் ஸ்மித் மற்றும் வார்னர்,தென்னாப்பிரிக்கா இடையே போட்டியின் போது பந்தை உப்பு பேப்பரை வைத்து சேதப்படுத்தி இருப்பார்கள்,அதனை குறிப்பிட்டு அவர் மைதானத்தில் அந்த மாதிரி செய்தார்.

மேலும் இந்திய வீரர் அஷுவினும் ஆஸி.ரசிகர் ஒருவரின் பதிவிற்கு,அது விரல்ல மாட்டக்கூடிய உறை என குறிப்பிட்டிருப்பார்.இதனால் பல முன்னாள் ஆஸி.வீரர்களும் இந்திய அணிக்கு ஆதராகவும்,குறிப்பாக பும்ராவை நீங்கள் சீண்டியது தவறு என சாம் கான்ஸ்டஸுக்கு அறிவுரை கூறியும் வருகிறார்கள்.

  • Sarathkumar and Devayani in 3BHK after 30 years 30 ஆண்டுகளுக்கு பிறகு தேவயானியுடன் சரத்குமார்…வைரலாகும் படத்தின் டீசர்..!