King Kohli-யை பகிரங்கமாக தாக்கிய ஆஸி.ஊடகம்…பரபரப்புக்கு நடுவே முடிந்த 2-ம் நாள் ஆட்டம்..!
Author: Selvan27 December 2024, 4:01 pm
CLOWN KOHLI மற்றும் SOOK என்ற வார்த்தைகளால் தாக்கிய AUS ஊடகம்
ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே 4 வது டெஸ்ட் போட்டி நடைபெற்று கொண்டிருக்கிறது.
நேற்று நடந்த முதல் நாள் ஆட்டத்தின் போது அதிரடியாக விளையாடிய ஆஸ்திரேலியா அணியின் இளம் துடக்க வீரரிடம் கோலி வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன்,அவருடைய தோள்பட்டையில் இடித்தார்.இதனை பார்த்த பல பேர் கோலி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி வந்தனர்.
இந்த சூழலில் ஆஸ்திரேலியா ஊடகம் ஒன்று,இந்த சம்பவத்தை கண்டித்து கோலியை பகிரங்கமாக தாக்கி செய்தி போட்டுள்ளது.அதில் ஜோக்கர் மாதிரி கோலியின் மூக்கின் மீது பந்தை வைத்து CLOWN KOHLI என கிண்டல் அடித்துள்ளனர்,மேலும் அவரை SOOK என்று குறிப்பிட்டுள்ளனர்.SOOK என்றால் கோழை அல்லது குழந்தை அழுவதை சொல்லுவார்கள்.
இதையும் படியுங்க: பும்ராக்கே சவாலா..வா முடிஞ்சா மோதி பாரு…அனல் பறக்கும் AUS VS IND டெஸ்ட் மேட்ச்..!
இதனை பார்த்த இந்திய ரசிகர்கள் மற்றும் இந்திய முன்னாள் வீரர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.இந்த பரபரப்புக்கு மத்தியில் இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்ற போது,முன்னதாக இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இறந்ததையொட்டி,அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கையில் கருப்பு பட்டையை அணிந்து இந்திய வீரர்கள் வந்தனர்.
பரபரப்பாக சென்ற இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது கோலி பேட்டிங் ஆட வரும் போது,அங்கே இருந்த ஆஸ்திரேலியா ரசிகர்கள் அவரை கிண்டல் அடித்தனர்.சிறிது நேரம் களத்தில் பொறுமையாக ஆடி கொண்டிருந்த கோலி அவுட் ஆகி பெவிலியன் சென்ற போது மீண்டும் அவரை பார்த்து ஆஸ்திரேலியா ரசிகர்கள் கிண்டல் அடித்து முழக்கங்களை விட்டனர்.
இதனால் கோவம் அடைந்த கோலி அவர்களை பார்த்து முறைத்து விட்டு சென்றார்.இந்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 164 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.
இந்த தடவையும் இந்திய அணி கேப்டன் ரோஹித் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தார்,நிதானமாக விளையாடிய இளம் வீரர் ஜெய்ஸ்வால் 82 ரன்களுக்கு ரன் அவுட் ஆக,பின்பு கோலி வழக்கம் போல ஆப் சைடு சென்ற பந்தை அடிக்க முயற்சி செய்து அவரது விக்கெட்டை பறிகொடுத்தார்.நாளைய நாள் ஆட்டத்தில் இந்திய அணி தடுமாற்றத்தில் இருந்து மீண்டு வருமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.