பாறை இடுக்குகளில் சிக்கிய இழுவை கப்பல்… கூடங்குளம் அணுஉலைக்கான உதிரி பாகங்கள் ஏற்றிச் செல்லும் போது விபத்து..!!

Author: Babu Lakshmanan
9 September 2023, 4:03 pm

நெல்லை கூடங்குளம் அணுமின் நிலைய பகுதியில் அணு உலைக்கான உதிரி பாகங்கள் ஏற்றி வந்த இழுவை கப்பலின் மிதவை பாறை இடுக்குகளில் சிக்கியதால் பரபரப்பு நிலவியது.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ஐந்து மற்றும் ஆறாவது அணு உலைகளுக்கான நீராவி உற்பத்தி செய்யும் இயந்திரம், நேற்று தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து இழுவை கப்பல் மூலம் கொண்டுவரப்படும் பொழுது, இலுவை கப்பலுக்கும், மிதவைக்கும் இடையிலான கயிறு அறுந்து விட்டதினால் நீராவி உற்பத்தி இயந்திரத்தின் மிதவை அங்குள்ள பாறை இடுக்குகளில் சிக்கி உள்ளது.

அதனை சரி செய்யும் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன. இதனால், மிதவையின் ஒரு பக்கம் சாய்ந்த நிலையில் இருப்பதினால், அதனை சரி செய்யும் பணிகளிலும், இதனை ஏற்றி வந்த ஒப்பந்தக்காரர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அணுமின் நிலையத்தின் சிறிய துறைமுக பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்குள் பாறை இடுக்குகளில் சிக்கியுள்ள அந்த மிதுவையானது, கடலின் நீர்மட்டத்தின் உயர்வு மற்றும் காற்றின் வேகத்தை பொறுத்து மீண்டும் அது கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள அந்த சிறிய துறைமுகத்திற்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Anirudh is in love with the daughter of a famous businessman. பிரபல தொழிலதிபரின் மகளை காதலிக்கும் அனிருத்.? இவங்களுக்குள்ள இப்படி ஒரு கனெக்ஷனா?