தமிழக பல்சமய நல்லுறவு இயக்க தலைவருக்கு ‘கோட்டை அமீர்’ விருது: குடியரசு தின விழாவில் வழங்கப்படுகிறது!!

Author: Rajesh
22 January 2022, 1:53 pm

கோவையை சேர்ந்த தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபீக்கிற்கு இந்த ஆண்டிற்கான கோட்டை அமீர் விருது வழங்கப்படுகிறது.

மத நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டு உயிர்நீத்த கோயம்புத்தூரைச் சேர்ந்த கோட்டை அமீர் அவர்களின் பெயரால் கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் ஏற்படுத்தப்பட்டு தமிழகத்தில் மத நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டு சிறப்பாக சேவை செய்துவரும் ஒருவருக்கு ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தில் விருது வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபீக் இந்த ஆண்டிற்கான கோட்டை அமீர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் அவருக்கு இந்த விருதை முதலமைச்சர் வழங்கி கவுரவிக்க உள்ளார்.

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவராக உள்ள கோவையை சேர்ந்த முகம்மது ரபீக் கடந்த ஊரடங்கு காலத்தின் போது சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோர்,வட மாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு நிலை ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்குவது, தொடர்ந்து மத நல்லிணத்திற்காக பாடுபடுவது உள்ளிட்ட சேவைகளை செய்து வரும் முகம்மது ரபீக்கிற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 9600

    0

    0