மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு… கட்டு கட்டாக சிக்கிய பணம்..!!!

Author: Babu Lakshmanan
9 November 2023, 3:54 pm

கோவில்பட்டியில் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் மின்வாரிய செயற்பொறியாளர் காளிமுத்துவிடம் இருந்து கணக்கில் வராத 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மின்வாரிய செயற்பொறியாளராக காளிமுத்து என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் அதிக அளவில் லஞ்சம் பெறுவதாக பரவலாக குற்றச்சாட்டு இருந்து வந்தது.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி பீட்டர் பால் துரை தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுதா, அனிதா மற்றும் அதிகாரிகள் குழுவினர் இன்று நண்பகல் ஒரு மணி அளவில் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் திடீரென நுழைந்து சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் மின்வாரிய செயற்பொறியாளர் காளிமுத்துவிடமிருந்து கணக்கில் காட்டப்படாத 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக முதல் முதல் கட்டமாக தெரியவந்துள்ளது.

மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் உள்ள பிற பணியாளர்கள் 10க்கும் மேற்பட்டோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Dragon Movie Release in OTT Date Announced வசூலில் மிரட்டிய டிராகன் ஓடிடியில் ரிலீஸ்… தேதி அறிவிப்பு!