வெட்டிக் கொல்லப்பட்ட ஊராட்சி தலைவரின் உடலை வாங்க மறுப்பு : தீவிர பேச்சுவார்த்தையில் போலீசார்..!!

Author: Babu Lakshmanan
23 August 2022, 1:02 pm

தூத்துக்குடி : கோவில்பட்டியில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள திட்டங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பொன்ராஜ் நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பாஜக ஒன்றிய இளைஞரணி தலைவர் கார்த்திக், வசந்த் ஆகிய 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொன்ராஜ் உடல் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்ட நிலையில், உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்த பின்பு தான், உடலை வாங்குவோம் என்று பொன்ராஜ் உறவினர்கள் மறுத்து வருகின்றனர். போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!