கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய கோயம்பேடு… சென்னை மக்களுக்கு மெட்ரோ நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

Author: Udayachandran RadhaKrishnan
4 December 2023, 9:23 pm

கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய கோயம்பேடு… சென்னை மக்களுக்கு மெட்ரோ நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அரக்கோணம் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கனமழையால் சென்னை பேசின் பிரிட்ஜ், வியாசர்பாடி இடையே உள்ள பாலத்தில் அபாய கட்டத்தை தாண்டியும் மழைநீர் பெருக்கெடுத்துள்ளதால், செல்வதால், சென்ட்ரலில் இருந்து புறப்படும் 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் காலையில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, மைசூரு, கோவை, பெங்களூரு, திருப்பதி உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனிடையே, பயணிகள் ஆலந்தூர் ரயில் நிலையத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தின் முன்புறம் உள்ள சாலை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இந்நிலையில், வழக்கம்போல ரயில் சேவை இருக்கும் என்று சென்னை மெட்ரோ அறிவித்துள்ளது.. மழை காரணமாக குறிப்பிட்ட வழித்தடங்களில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அறிவிப்பு வெளியிட்டுள்ளது… இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் உள்ளதாவது:

செயிண்ட் தாமஸ் மவுண்ட் மெட்ரோ ரயில் நிலையத்தில் 4 அடி அளவுக்கு தண்ணீர் தேங்கி உள்ளதால், பயணிகள் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சேவை முடங்கி உள்ளதாகவும் பயணிகள் ஆலந்தூரில் ரயில் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.. கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் வரும் சாலையில் தண்ணீர் வெள்ளம் போல வருவதால், ரோஹினி தியேட்டர் அருகே உள்ள நடைமேம்பாலம் வழியே வரவேண்டும்.

அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலைய சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால், அங்கு வருவது பயணிகளுக்கு சற்றே கடினமாக இருக்கும்.. அரசினர் தோட்ட மெட்ரோவுக்கு வாலஜா சாலை சப்வே சாலை மூடப்பட்டுள்ளதாகவும் பயணிகள் பிற வழிகள் மூலம் அரசினர் தோட்ட மெட்ரோ ரயில் நிலையத்துக்குச் செல்லலாம். வழக்கம் போல ரயில் சேவை காலை 5 மணி முதல் இயங்கி வருகிறது. பிற ரயில் நிலைய பகுதிகளில் தண்ணீர் அளவு பெரிய அளவில் தேங்கவில்லை” என்று சென்னை மெட்ரோ சார்பில் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Famous director dies suddenly… Film industry in shock பிரபல இயக்குநர் திடீர் மரணம்… திரையுலகம் ஷாக் : தயாரிப்பாளர் கண்ணீர் பதிவு!