கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நாளை விடுமுறை..! ஏன் தெரியுமா? விவரம் இதோ..!

Author: Vignesh
24 October 2022, 9:08 am

சென்னை: கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு சந்தை சென்னையில் இயங்கி வரும் பெரிய சந்தைகளில் ஒன்று. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ஆகிய மாவட்டங்களுக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

காய்கறிகள் ஆந்திரா, கர்நாடகா, மகாராட்டியம் மற்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு வருகின்றன.

koyambedu market - updatenews360

இந்நிலையில், கோயம்பேடு காய்கறி அங்காடி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி.ராஜசேகர் கோயம்பேடு காய்கறி சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பணி செய்து வரும் வியாபாரிகள், தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று இருப்பதால் தீபாவளிக்கு மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காய்கறி மார்க்கெட்டுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி