புள்ளய காப்பாத்துங்க.. மினி பேருந்தின் டயரில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்த சிறுவன்..!

Author: Vignesh
27 July 2024, 4:32 pm

சூளகிரி அருகே 3 வயது சிறுவன் மினி பேருந்தின் டயரில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்த நிலையில்,மினிபேருந்தை கிராம மக்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த உத்தனப்பள்ளி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கிருஷ்ணம்மாகொத்தூர் என்ற கிராமத்தில் இன்று காலை தனியார் தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்வதற்க்காக தாய் திவ்யா (28) மினி பேருந்தின் ஏறவந்த போது இவரின் 3 வயது மகனான கிரிவாஸ் என்ற சிறுவன் பேருந்தின் குறுக்கே ஓடிவந்த நிலையில் எதிர்பாராத விதமாக மினி பேருந்தின் முன்பக்க டயர் சிறுவன் மீது ஏறியதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்..

இந்த நிலையில் சம்பவ இடத்தில் இருந்து கிராம மக்கள் மினி பேருந்தின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி , ஓட்டுனர் ரூபேஷ்குமாரை பலமாக தாக்கியுள்ளார்.

இதன் சம்மந்தமாக உத்தனப்பள்ளி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் மினி பேருந்தின் டயரில் சிக்கி உயிரிழந்த சிறுவனின் உடலை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதன் சம்மந்தமாக உத்தனப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்திற்க்கான விசாரணையை நடத்தி வருகின்றனர். கிராமத்தில் மினி பேருந்தின் டயரில் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Kangana Ranaut Invites Priyanka Gandhi to watch Emergency movie எமர்ஜென்சி பார்க்க வாங்க.. பிரியங்கா காந்திக்கு அழைப்பு விடுத்த பாஜக எம்பி!
  • Views: - 214

    0

    0