மாந்தோப்பில் ரத்த வெள்ளத்தில் கிடந்த மூதாட்டியின் சடலம்.. தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த நபர் : போலீசார் விசாரணை!!

Author: Babu Lakshmanan
1 April 2023, 3:53 pm

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே மாந்தோப்பில் நடந்து சென்ற மூதாட்டியை கல்லை போட்டு கொலை செய்து விட்டு நகையை பறித்துச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கும்மனூர் கிராமத்தில் வசித்து வரும் பொண்னியம்மாள் (78). இன்று காலை மாந்தோப்பு வழியாக அருகில் இருக்கும் மளிகை கடைக்குச் செல்வதற்காக தனியே நடந்து சென்றுள்ளார்.

அப்போது, அங்கு பதுங்கி இருந்த மர்ம நபர், அவர் காதில் அணிந்திருந்த தங்க நகையை பறித்துக் கொண்டு, அவரிடம் இருந்த ரூபாய் 7000 எடுத்து கொண்டு, கல்லால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

மாந்தோப்பில் பெண் சடலம் இருப்பதாக காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளர் அமல அட்வின் உட்பட கல்லாவி காவல்துறையினர் மூதாட்டியின் உடலை கைப்பற்றி ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ