தோல்வி பயம்… அவங்களுக்கு பின்னால் ஒளிந்து கொண்டார் முதலமைச்சர் ஸ்டாலின் : இடைத்தேர்தல் குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்
Author: Babu Lakshmanan9 February 2023, 10:00 pm
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத முதலமைச்சர் ஸ்டாலினை பார்த்து வாக்காளர்கள் ஸ்டாலின் நோக்கி கேள்வி கேட்க வேண்டும் என்று புதிய தமிழகம் கூட்டணி கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் திண்டல் அடுத்துள்ள வேப்பம் பாளையத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு புதிய தமிழகம் கூட்டணி கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேசினார்.
அவர் பேசியதாவது :- தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பேச்சுவார்த்தை நடத்தி இபிஎஸ் வேட்பாளர் அறிவித்த நிலையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை முன்னிறுத்தி திமுக தலைவர் ஸ்டாலின் ஒளிந்து கொண்டுள்ளார். இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டாலும் கூட, அதிமுக போட்டியிடும் என்கிற மன தைரியத்துடன் இபிஎஸ் வேட்பாளர் அறிவித்தார்.
2021ம் முதல் தொடங்கி 2022ம் ஆண்டு நிறைவடைந்தும், திமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற ஸ்டாலின் இதுவரை தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து சொல்லி ஆட்சிக்கு வந்த நிலையில் இதுவரை நீட் தேர்வு ரத்து செய்யவில்லை. பழைய ஓய்வூதியம் ரத்து குடும்ப தலைவிக்கு மாதம் ஆயிரம், ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என்கிற வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
ஆகையால் தோல்வி பயத்தால் தான் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். அதனால் வாக்காளர்கள் ஸ்டாலின் நோக்கி கேள்வி கேட்க வேண்டும். மாதம் ஒருமுறை மின்கட்டண கணக்கீடு இதுவரை எடுக்கப்பட்டவில்லை. ஆகையால் இதற்கு கடிவாளம் போட இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு வாக்களிக்க வேண்டும், என கேட்டுக்கொண்டார்.