அஜித் ரசிகர்களை குஷிப்படுத்த விக்னேஷ் சிவன் செய்த செயல்.. சினம் கொண்டு எழுந்த விஜய் ரசிகர்கள்..!

Author: Rajesh
28 April 2022, 5:43 pm

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் முக்கோண காதல் கதையாக வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனத்தை பெற்றுள்ளது.

இந்த திரைப்படத்தை, செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவுடன் இணைந்து, விக்னேஷ் சிவன், நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசைமையத்துள்ளார். நானும் ரௌடிதான் படத்திற்கு பிறகு மீண்டும் நயன்தாரா- விஜய்சேதுபதி இணைந்து, பெரிய எதிர்பார்ப்புகளுடன் இன்று திரைக்கு வந்துள்ளது.

இதில், கண்மணி கதாபாத்திரத்தில் நயன்தாராவும், கதிஜா கதாபாத்திரத்தில் சமந்தாவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இவர்கள் இருவரையும் காதலிப்பவராக விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடித்துள்ளார். மேலும், டாக்டர் பட புகழ் ரெடின் கிங்ஸ்லி இந்தப் படத்தில் சிறப்பான காமெடியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மொத்தத்தில், விக்னேஷ் சிவன் இந்த படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் சிறப்பான திரைக்கதையுடன் அணுகியுள்ளார் என்று விமர்சனங்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். மறுபுறம் விஜய் ரசிகர்கள் இந்த படத்தை, விமர்சித்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

என்ன காரணம் என்று பார்த்தால், இந்த படத்தின் ஒரு காட்சியில் விஜய்யின் பிகில் பட முக்கிய காட்சியை ரீ-கிரியேட் செய்துள்ளனர். அதில் ரெடின் கிங்ஸ்லி விஜய்யை போல வசனம் பேசி நடித்துள்ளார். இந்த காட்சி பார்வையாளர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று தந்த நிலையில், விஜய்யின் ரசிகர்களை சிறந்த காட்சியை விக்னேஷ் சிவன் இப்படி செய்திருக்க கூடாது என சினம் கொண்டு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 1203

    1

    0