குருத்திகா வழக்கில் திடீர் திருப்பம்… நீதிபதிகளுக்கு கொடுக்கப்பட்ட கடிதம் ; கணவன் ஏமாற்றம்
Author: Babu Lakshmanan16 February 2023, 5:50 pm
இளம்பெண் குருத்திகா கடத்தப்பட்ட வழக்கை, பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பிறகு உயர்நீதிமன்ற மதுரை கிளை முடித்து வைத்தது.
தென்காசி மாவட்டம் கொட்டாகுளத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் வினித் என்பவர், நவீன் பட்டேல் என்பவரின் மகளான குருத்திகா பட்டேலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனிடையே, கடந்த டிசம்பர் 27ம் தேதி நாகர்கோவிலில் திருமணம் செய்து கொண்ட நிலையில், கடந்த மாதம் குருத்திகா பட்டேலை அவரது பெற்றோர் கடத்திச் சென்று விட்டதாக, போலீஸில் வினீத் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், தனது மனைவியை கடத்தி சென்றுவிட்டதாகக் கூறி ஆட்கொணர்வு மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு குறித்து பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பிறகு, சம்பந்தப்பட்ட பெண்ணை இன்று பிற்பகல் 2.15 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.
இந்நிலையில், நீதிபதிகளின் உத்தரவை அடுத்து, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் குருத்திகா ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, கிருத்திகாப்பட்டலை அவருடன் உறவினருடன் செல்ல உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதியளித்தது.
இது தொடர்பாக நீதிபதிகள் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:- கிருத்திகா பட்டேல் மேஜர் என்பதால் யாருடன் செல்ல வேண்டும் என்பது அவருடைய விருப்பம்.
கிருத்திகா பட்டேல் யாருடன் செல்ல உள்ளார் என்பதை எழுத்து மூலமாக தர வேண்டும்.
கிருத்திகா பட்டேல் வழக்கில் பல தரப்பில் அதிகாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கிருத்திகா பட்டேல் யாருடன் செல்கிறாறோ அவர் பெண்ணின் பாதுகாப்பிற்கு பொறுப்பு. கிருத்திகா பட்டேல் விசாரணைக்கு முறையாக ஆஜர்படுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என தெரிவித்தனர்.
இதனிடையே, கிருத்திகா பட்டேல் கேரளாவில் உள்ள உறவினர் ஹரிஸ் உடன் செல்வதாக கடிதத்தின் மூலம் நீதிபதிகளிடம் தெரிவித்தார். கிருத்திகா பட்டேல் கேரளாவில் உள்ள உறவினர் ஹரிஸ் பொறுப்பில் அனுப்பி வைக்கப்பட்டார்.
பெற்றோரால் கடத்தப்பட்ட பெண்ணை ஆஜர்படுத்த கோரி காதல் கணவன் தொடர்ந்த வழக்கு முடித்தது வைக்கப்பட்டது.