கமல் 10 வேடங்களில் வித்தியாசமாக நடித்த படம் தான் தசாவதாரம். அந்த படத்திற்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் ரெஸ்பான்ஸ் கிடைத்தது. கமல் எப்படி அத்தனை ரோல்களில் லுக் மற்றும் குரலை மாற்றி நடித்தார் என்பதே தற்போதும் பலருக்கும் ஆச்சர்யம் அளிக்கும் விஷயம் தான்.
அந்த படத்தை இயக்கிய கே.எஸ்.ரவிக்குமார் சமீபத்தில் ஒரு கல்லூரி விழாவில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் தசாவதாரம் படம் பற்றி கேட்கப்பட்டது. அதன் அடுத்த பாகம் வருமா என்றும் சிலர் கேள்வி எழுப்பினார்கள்.
அது பற்றி பேசிய கே.எஸ்.ரவிக்குமார், ‘தசாவதாரம் படம் வந்து 12 வருடங்கள் ஆகிவிட்டது. சமீபத்தில் கூட கமல் என்னிடம் போனில் நீண்ட நேரம் பேசினார். பலரும் தசாவதாரம் 2 பற்றி கேட்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் எத்தனை கோடி கொடுத்தாலும் மீண்டும் தசாவதாரம் போன்ற படத்தை எடுக்க முடியாது’ என கூறிவிட்டார்.
அதனால் தசாவதாரம் 2 வர வாய்ப்பு சுத்தமாக இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது.