இருசமூக பிரச்சனையால் இடிக்கப்பட்ட கோவில்.. மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலை..!

Author: Vignesh
22 August 2024, 4:50 pm

இருசமூக பிரச்சனையால் இடிக்கப்பட்ட காளியம்மன் கோவிலில் ஒருங்கிணைப்பு குழு முன்னிலையில் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலை.


கே.வி.குப்பம் அடுத்த கெம்மங்குப்பம் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இரு சமூகத்தினர் (Sc மற்றும் மாற்று சமூகத்தினர்) இடையே ஏற்பட்ட பிரச்சனையில் ஒரு தரப்பினரால் (மாற்று சமூகத்தினரால்) கடந்த 6-ம் தேதி கோவில் இடிக்கப்பட்டு உள்ளே இருந்த காளியம்மன் சிலை எடுத்து செல்லப்பட்டது.

இது தொடர்பாக குடியாத்தம் கோட்டாட்சியர் சுபலட்சுமி தலைமையில் நடைபெற்ற அமைதி குழு பேச்சு வார்த்தையில் வட்டாட்சியர், அறநிலைய, பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட ஏழு பேர் கொண்ட கமிட்டி (ஒருங்கிணைப்பு குழு) அமைக்கப்பட்டு சிலையை மீண்டும் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.

இதனை அடுத்து நேற்று (22.08.2024) கே.வி.குப்பம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிலை ஒப்படைக்கப்பட்ட நிலையில் இன்று இடிக்கப்பட்ட கோவிலில் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

கே.வி.குப்பம் வட்டாட்சியர் சந்தோஷ் தலைமையிலான அறநிலை துறை அதிகாரிகள் அடங்கிய ஏழு பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவினர் முன்னிலையில் முறையாக காளியம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில் இரு தரப்புக்கும் அதிகாரிகள் அழைப்பு விடுத்த நிலையில் ஒரு தரப்பினர் மட்டுமே கலந்துகொண்டனர்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்