தமிழ் மட்டுமே உயிர் மூச்சு… காமராஜரின் தொண்டன் : கடைசி வரை கட்சி மாறாத குமரி அனந்தன்!
Author: Udayachandran RadhaKrishnan9 April 2025, 9:26 am
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் வயது மூப்பு காரணமான காலமானார். அவருக்கு வயது 93.
நேற்று இரவு 12.30 மணியளவில் அவர் காலமானார். சாலி கிராமத்தில் உள்ள அவரது மகள் தமிழிசை வீட்டில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்க: நள்ளிரவில் பாஜக தலைவர் வீட்டில் குண்டு வெடித்ததால் பதற்றம்.. வெடிகுண்டை வீசிய மர்மநபர்கள் யார்?
தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும், தமிழ் மொழியையும் நேசித்தவர், தேசியத்தையும் காந்தியத்தையும் வாழ்க்கை முறையாக கொண்டவர். கடந்த வருடம் தமிழ்நாட்டின் தகைசால் விருதை குமரி அனந்தனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கியிருந்தார்.
தந்தை மறைவு குறித்து உருக்கமாக பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை, தமிழ் தமிழ் என்பது அவர்களின் உயிர் மூச்சு, மொராஜி தேசாய் ஆட்சி செய்யும் போது எம்பியாக தேர்வு செய்யப்பட்ட குமரி அனந்தன், முதல் முதலில் தமிழை பாராளுமன்றத்தில் ஒலிக்க செய்வதர். 8 முறை பாத யாத்திரை செய்திருக்கிறார், தமிழக காங்., கமிட்டி தலைவராக இருந்திருக்கிறார், 4 முறை எம்எல்ஏவாகவும் இருந்திருக்கிறார். அவர் 12.30க்கு தனது கடைசி மூச்சை விட்டதாக குறிப்பட்டார்.

குமரி அனந்தன் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் தனது 93வது பிறந்தநாளை குடும்பத்தோடு கொண்டாடிய
குமரி அனந்தனின் இறுதிச்சடங்கு இன்று மாலை 5 மணிக்கு விருகம்பாக்கம் இடுகாட்டில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.