அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யனும்… தகுதியே இல்லாதவர் அனிதா ராதாகிருஷ்ணன் ; பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன்

Author: Babu Lakshmanan
5 April 2024, 6:04 pm

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யனும்… தகுதியே இல்லாதவர் அனிதா ராதாகிருஷ்ணன் ; பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை ராஜினாமா செய்ய சொல்ல வேண்டும் என்று குமரி தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க: வாழ்நாள் முழுவதும் அலைய விட்டுருவேன்.. மிரட்டிய பாஜக வேட்பாளர்… டக்கென தேர்தல் அதிகாரி கொடுத்த ரியாக்ஷன்..!!!

முன்னாள் மத்திய இணை அமைச்சரும், குமரி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளருமான பொன் ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் பாராளுமன்ற தொகுதி தேர்தலுக்கான, தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அவருடன் நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ எம்.ஆர். காந்தி மற்றும் மாநில, மாவட்ட பாஜக நிர்வாகிகள் இருந்தனர்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :- கன்னியாகுமரி மாவட்டத்தில் மதத்தை வைத்து மக்களை பிளவுபடுத்தி தேர்தலில் வெற்றி பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் பள்ளி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வரும் கலாச்சாரம் அரசுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. வேலைவாய்ப்பை பொருத்தவரை அரசு வேலை குறைந்து வருகிறது. தனியார் நிறுவனங்களில் வேலை அதிகரித்து வருகிறது. பாஜக மீண்டும் ஆட்சி பொறுப்பு ஏற்றதும் படித்த வேலை இல்லாத இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் படிக்க: பிரச்சாரத்தில் தேர்தல் விதிகளை மீறியதாக புகார். . பாஜக வேட்பாளர் பொன் பாலகணபதி மீது போலீசார் வழக்குப்பதிவு

2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நான்கு வழிச்சாலை பணிகள் அனைத்தும் நிறைவு பெறும். வந்தே பாரத் ரயிலில் படுக்கை வசதி ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கிழக்கு கடற்கரை வழியாக புதிய ரயில் பாதை அமைக்கப்படும் விமான நிலையம் ஹெலிகாப்டர் தளம் போன்ற வசதிகள் அமைக்க நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை ராஜினாமா செய்ய சொல்ல வேண்டும். அந்த துறைக்கு அவர் எந்தவிதத்திலும் தகுதியும் இல்லை, எனக் கூறினார்.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!