குமரி ; கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே கல்லூரி மாணவியை காதலித்து திருமணம் செய்வதாக கூறி காதலன் ஏமாற்றியதால் விஷம் அருந்தி தற்கொலையா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே வாவறை பகுதியை சேர்ந்தவர் சின்னப்பர் (வயது 56) கூலித்தொழிலாளியான இவருக்கு, தங்கபாய் (வயது 51) என்ற மனைவியும், மூன்று மகள்களும் உள்ளனர். இதில் இரண்டு பேருக்கு திருமணமான நிலையில், மூன்றாவது மகள் களியக்காவிளை பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாவது ஆண்டு படித்து வரும் நிலையில், பள்ளியில் படிக்கும் போதே நித்திரவிளை பகுதியை சேர்ந்த வருண் என்பவரை காதிலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், காதலன் வருண் மாணவியிடம் திருமணம் செய்வதாக கூறி பல இடங்களுக்கு அழைத்து சென்று ஊர் சுற்றியதாக கூறப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன் வருணின் குடும்பத்தினர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காமல் இருந்துள்ளதாக கூறப்படும் நிலையில், வீட்டில் யாரிடமும் பேசாமல் சோகமாக இருந்து வந்துள்ளார்.
கடந்த 1ம் தேதி காலை திடீரென மாணவிக்கு வயிற்றுவலி ஏற்பட்டு உள்ளதாக கூறியதை தொடர்ந்து, அவரது பெற்றோர் மாணவியை அழைத்து கொண்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்து உள்ளனர். மூன்று நாட்கள் அங்கு சிகிச்சை பெற்றும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததை தொடர்ந்து 4ம் தேதி கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மாணவி நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து மாணவியின் தாயார் தங்கபாய் நித்திரவிளை போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காதலன் திருமணம் செய்வதாக கூறி ஏமற்றியதால் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெருஞ்சேரியில் 19ஆம் தேதி சுமார் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்…
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…
எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…
சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம். ஆனால்…
யதார்த்த சினிமா கோலிவுட்டில் யதார்த்த சினிமா இயக்குனர்களுள் மிகவும் முக்கியமானவராக வலம் வருபவர் வசந்தபாலன். இவர் இயக்கிய “வெயில்”, “அங்காடித்…
This website uses cookies.