எச்சரிக்கையை மீறி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள்… வீடியோ வெளியிட்டு அரசின் மீது அதிருப்தி!!

Author: Babu Lakshmanan
25 May 2024, 10:41 am

குமரி மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக் கூடாது என்ற மாவட்ட நிர்வாகத்தின் எச்சரிக்கையை மீறி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் கடல் சீற்றமாக இருப்பதாக கூறி மீண்டும் துறைமுகத்திற்கு திரும்பி வருவதாக கூறி வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார்.

மேலும் படிக்க: வார இறுதியில் கொஞ்சம் அப்செட்… சற்று அதிகரித்த தங்கம் விலை… மளமளவென சரிந்த வெள்ளி விலை!!

கடந்த ஒரு வாரமாக குமரி உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டு கடலில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் பாதுகாப்பு கருதி மீனவர்கள் மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லக் கூடாது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விட்டிருந்தது.

இந்த நிலையில், குமரி மாவட்டத்தில் உள்ள மீனவர்களும் கடலுக்கு செல்லக் கூடாது என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி தொடர் மழை மற்றும் காற்று காரணமாக குமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லாத நிலையில், ஒரு சில மீனவர்கள் அரசின் எதிர்ப்பை மீறி கடலுக்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அரசின் எதிர்ப்பை மீறி மீனவர் ஒருவர் விசை படகில் 10 க்கும் மேற்பட்ட மீனவர்களுடன் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார். அங்கு பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்பட்டு கரை திரும்பி உள்ளார். இதனை அரசின் மீது குற்றம் சாட்டுவது போல் வீடியோ ஒன்றை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்கி உள்ளார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வரும் நிலையில், பலரும் அவரது பதிவிற்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் குமரி மாவட்ட மீனவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Sundar C's Sangamithra movie revival பாதாளத்தில் உள்ள தனது கனவு படத்தை தோண்ட முடிவு…சுந்தர் சி போடும் பக்கா பிளான்…!