காவல்துறையை கண்டித்து ஆட்டோ ஓட்டுநர் தீக்குளிப்பு.. போலீஸ் கஸ்டடியில் மகன்… வாக்குமூலம் வாங்கிய நீதிபதி…!!!

Author: Babu Lakshmanan
9 September 2023, 10:04 am

கும்பகோணம் மேற்கு காவல்நிலைய வளாகத்தில் காவல்துறையை கண்டித்து ஆட்டோ ஓட்டுநர் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் செக்காங்கண்ணியை சேர்ந்தவர் ஜான் பென்னி (49). இவர் ஆட்டோ ஓட்டுநர், இவரது மகன் பிரவின்குமாரை மேற்கு காவல்துறையினர், வழிப்பறி வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

இதனால் காவல்துறையை கண்டித்து பிரவின் குமாரின் தந்தை ஜான் பென்னி, மேற்கு காவல்நிலைய வளாகத்தில் உடலில் மண்ணென்னையை ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆபத்தான நிலையில் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது தீக்காயம் அதிகமாக இருப்பதால், மருத்துவமனையில் நீதிபதி முன்பு வாக்குமூலம் பெறப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்ந்து, தனது மகன் மீது பல்வேறு பொய் வழக்குகளை போட்டு வருவதாக ஜான் பென்னி தெரிவித்தார். பிரவின்குமார் மீது ஆயுத தடைச் சட்டம், வழிப்பறி போன்ற மூன்று வழக்குகள் நிலுவையில் உளளதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…