கும்பகோணம் அரசு கல்லூரி காலவரையின்றி மூடல்..மாணவர்கள் போராட்டத்தால் திடீர் அறிவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
28 August 2024, 10:15 am

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கலை கல்லூரியில் தமிழ்த்துறை உதவி பேராசிரியை ஜெயவாணி ஸ்ரீ கடந்த மாதம் 18-ந்தேதி வகுப்பறையில் மாணவர்களை அவமதித்ததாக புகார் எழுந்தது.பேராசிரியை ஜெயவாணி ஸ்ரீ சாதி ரீதியாக பேசியதால் நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கும்பகோணம் கலை கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களை சாதிப்பெயர் கூறி திட்டிய பேராசிரியை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம் நடந்து வந்த நிலையில் தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் போராட்டம், மாணவர்களின் தொடர் வகுப்பு புறக்கணிப்பு காரணமாக அசாதாரண சூழ்நிலை நிலவுவதால் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 316

    0

    0