தமிழகத்தில் நடப்பது கண்ணுக்கு தெரியலையா..? கண்களை திறந்து பாருங்க, CM ஸ்டாலின் அவர்களே… நடிகை குஷ்பு பாய்ச்சல்!!

Author: Babu Lakshmanan
12 January 2023, 5:47 pm

தூத்துக்குடி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது என்றும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் பாஜக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள
தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்த பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பூ செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:- தூத்துக்குடி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. தமிழக முதல்வர் கண்ணை மூடிக்கொண்டு செயல்படுவது போல் செயல்படுகிறார். தமிழகத்தில் எதுவுமே நடக்கவில்லை.

ஈஷா மையத்தில் சுபஸ்ரீ உயிரிழந்துள்ளார். முறையாக விசாரணை நடத்த வேண்டும். சட்டம் அனைவருக்கும் சமம். ஈசாவுக்கு என்று ஒரு சட்டம், நமக்கு என்று ஒரு சட்டம் எதுவும் கிடையாது. முறையாக விசாரணை நடைபெற வேண்டும்.

சட்டசபையிலிருந்து ஆளுநர் வெளியே செல்லும்போது, அமைச்சர் பொன்முடி போயா என்று இழிவாக பேசி உள்ளார். இதுதான் திராவிட மாடல் ஆட்சியா…? மற்றவர்களை தரக்குறைவாக இழிவாக பேசுவது தான் திராவிட மாடலா..? என கேள்வி எழுப்பினார்.

நாட்டில் இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாவது குறித்து மத்திய அரசு மட்டுமல்ல, மாநில அரசு மட்டுமல்ல அனைவரும் ஒன்றிணைந்து அது குறித்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

  • Aadukalam movie casting controversy என்கூட நடிக்க மறுத்தார்..தனுஷ் செய்தது சரியா..வெளிப்படையாக பேசிய பார்த்திபன்.!
  • Close menu