கூத்தாண்டவர் கோவில் திருவிழா : தாலி கட்டும் நிகழ்வு மற்றும் மிஸ் கூவாகம் போட்டி நடைபெறும் தேதி அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan6 April 2022, 8:44 pm
விழுப்புரம் : மிஸ்கூவாகம் போட்டி ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறுவதாக தென்னிந்திய திருநங்கைகள் அறிவித்துள்ளனர்.
விழுப்புரத்தில் தென்னிந்திய திருநங்கைகள் சங்கத்தின் சார்பாக செய்தியாளர்களை சந்தித்த ஒருங்கிணைப்பாளர் அருணா, உலக அளவில் புகழ் பெற்ற திருநங்கைக்களுக்கான மிஸ் கூவாகம் போட்டி கொரனோ பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகள் நடத்தபடாமல் இருந்த நிலையில் தற்போது கொரனோ பரவல் குறைந்துள்ளது. சகஜ நிலை திரும்பியுள்ளதால் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி விழுப்புரத்தில் மிஸ் கூவாகம் போட்டி நடைபெறுவதாகவும், 19 ஆம் தேதி திருநங்கைகள் தாலி கட்டி கொள்ளும் நிகழ்வும், 20 ஆம் தேதி திருதேர் நிகழ்வும் நடைபெறுவதாக அறிவித்தனர்.
அதனை தொடர்ந்து பேசிய திருநங்கை அருணா, கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 8 ஆண்டுகள் திருநங்கைகளுக்கான நலவாரியம் செயல்படவில்லை எனவும் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு திரு நங்கைகளுக்கான நலவாரியம் சிறப்பாக செயல்படுவதாகவும், திருநங்கைகள் பிரச்சனைகள் தீர்க்கப்படுவதாகவும் தமிழக முதலமைச்சாரக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கிராமங்கள் தோறும் எத்தனை திருநங்கைகள் உள்ளனர் என கணக்கெடுக்கப்பட்டு கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மிஸ் கூவாகம் போட்டி நடைபெறும் என பெருமிதமாக தெரிவித்துள்ளனர்.
மிஸ் கூவாகம் போட்டியில் வாழ்நாள் சாதனையாளர் திருநங்கை 5 பேருக்கும், இளம் திருநங்கை சாதனையாளர் 5 பேருக்கு விருது வழங்கவும் ஏற்பாடு செய்யபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.