‘எல்.முருகனின் வாக்கு கள்ள ஓட்டாக போடப்பட்டுள்ளது’: மாநில பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு..!!

Author: Rajesh
19 February 2022, 5:09 pm

சென்னையில் மத்திய அமைச்சர் எல். முருகனின் வாக்கு கள்ள ஓட்டாக போடப்பட்டுள்ளதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் 648 நகரப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

இன்று காலை ஒரு சில இடங்களில் பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் விநியோகம் செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. திமுகவுக்கு எதிராக பாஜக மற்றும் அதிமுகவினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இருப்பினும், அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

பாஜகவை பொருத்தவரையில் இன்று காலை முதலே அக்கட்சித் தொண்டர்கள் தங்களுக்கான வாக்குகளை பெறுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் மத்திய அமைச்சர்கள் முருகனின் வாக்கை கள்ள ஓட்டாக வேறு ஒருவர் செலுத்தியதாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

”மத்திய அமைச்சர் எல். முருகனின் வாக்கு சென்னை அண்ணாநகர் கிழக்கில் உள்ள வாக்குச்சாவடியில் வேறு ஒரு நபரால் கள்ள வாக்காக போடப்பட்டு விட்டது. மாநில தேர்தல் ஆணையர் இப்போதாவது நடவடிக்கை எடுப்பாரா..? என கேள்வி எழுப்பியுள்ளார்”.

  • vadivelu trying to hit the car of goundamani and senthil car கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?