திண்டுக்கல் அருகே கூலித்தொழிலாளி கல்லைப் போட்டுக் கொலை : குற்றவாளிகள் தலைமறைவு… திணறும் போலீஸ்!
Author: Udayachandran RadhaKrishnan6 July 2024, 11:18 am
திண்டுக்கல் வேடப்பட்டி சுடுகாடு அருகே திண்டுக்கல் திருமலைசாமிபுரம் பகுதியை சேர்ந்த பாண்டி(39) என்பவர் தலையில் கல்லை போட்டு கொலை, இது குறித்து திண்டுக்கல் நகர் தெற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி சம்பவம் குறித்து திண்டுக்கல் நகர் ASP.சிபின் தலைமையான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நள்ளிரவில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக பாண்டியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.மேற்படி கொலை சம்பவம் குறித்து .
திண்டுக்கல் நகர் ஏஎஸ்பி.சிபின் தலைமையிலான போலீசார் 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் இது தொடர்பாக மேலும் சிலரை திண்டுக்கல் நகர் தெற்கு போலீசார் தேடி வருகின்றனர். விடியா திமுக ஆட்சியில் தொடர்ந்து கொலை சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து பொதுமக்கள் நிம்மதி இன்றி வாழ்வதாக அர்த்தம் தெரிவிக்கின்றனர்.