இப்ப நாட்டுல லட்டு தான் பிரச்சனையா? சாப்பிட்டவங்க உயிரோடு தானே இருக்காங்க : சீமான் பேச்சு!

Author: Udayachandran RadhaKrishnan
20 September 2024, 7:57 pm

செய்தியாளகர்ளிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், லட்டு விவகாரம் குறித்து பேசும் போது, லட்டு தயாரித்த நிறுவனத்தை தான் கேட்க வேண்டும். நாட்டில் இதுதான் பிரச்சினையா, சாப்பிட்ட அனைவரும் உயிருடன் தானே இருக்கிறார்கள்.

அதில் எதுவும் பிரச்சினை இல்லை தானே. இனிமேல் அப்படி தயாரிக்க வேண்டாம் என்று கூறலாம். முன்பு ஒப்பந்தம் கொடுத்தவருக்கு, அதனை நீக்கிவிட்டு வேறு வேளையை பார்க்கலாம்.

seeman speech tirupathi laddu

மேலும் படிக்க: மண்டையில் மூளைக்கு பதில் மலம்தானே இருக்கு: திராவிடிய பகுத்தறிவு.. நடிகை கஸ்தூரியின் பதிவால் சர்ச்சை!

இதை ஒரு நாட்டின் பிரச்சினையாக கொண்டு போக வேண்டாம். ஆட்சியில் இருப்பவர்களால் உருவாக்கப்பட்ட பிரச்சினையே இங்கு ஏராளமாக உள்ளது.

அதை பற்றி ஏன் பேச மறுக்கின்றீர்கள். லட்டு அப்படி தயாரிக்க கூடாது எனில், அதை தயாரித்தவர்களிடம் தான் விசாரிக்க வேண்டும். ஒப்பந்தம் கொடுக்கப்பட்ட நிறுவனத்திடம் தான் இதுபற்றி கேட்க வேண்டும் என்று தெரிவித்தார்.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 254

    0

    0