தேனியில் சமூக நலத்துறை அலுவலகத்தில் பெண் திட்ட அலுவலரை பட்டப்பகலில் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்ட சமூக நலத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலகத்தில் திட்ட அலுவலராக ராஜராஜேஸ்வரி (52) என்பவர் பணியாற்றி வருகிறார். 2015ம் ஆண்டு போடியை சேர்ந்த உமாசங்கர் (52) என்பவர் அதே அலுவலகத்தில் ஜூனியர் அசிஸ்டெண்ட் ஆக பணியாற்றி வந்துள்ளார்.
அலுவல் பணி கோப்புகள் மறுசீரமைப்பு போன்ற வேலைகளில் தனது கை வண்ணத்தை காட்டி வந்த ஜூனியர் அசிஸ்டென்ட் உமாசங்கர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வண்ணம் அலுவல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோவில் மகளிர் மேம்பாட்டு திட்டத்தில் ஜூனியர் அசிஸ்டெண்ட் ஆக உமாசங்கர் பணி இடமாற்றம் செய்யப்பட்டார். பணியிட மாறுதலால் கடும் கோபம் அடைந்த உமாசங்கர், ராஜராஜேஸ்வரியை பழிவாங்கும் எண்ணத்தோடு ஐந்தாண்டு காலம் காத்திருந்துள்ளார்.
இந்த நிலையில், இன்று ராஜராஜேஸ்வரி அலுவலகத்திற்கு வந்த உமாசங்கர், தன்னிடம் இருந்த அரிவாளால், தலை மற்றும் கை தோள்பட்டை போன்ற இடங்களில் சரமாரியாக வெட்டினார். இஇந்த சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட திட்ட அலுவலர் தண்டபாணி மற்றும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு நேரில் ஆஜராகி விசாரணை செய்து, குற்றவாளியை கைது செய்து தேனி காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
மேலும் அரிவாளால் தாக்கப்பட்ட ராஜராஜேஸ்வரி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.