கணவன் – மனைவி பிரச்சனையை தீர்க்க லஞ்சம் ; பெண் காவல் ஆய்வாளர் கைது செய்து சிறையில் அடைப்பு

Author: Babu Lakshmanan
22 October 2022, 10:48 am

சென்னை : கணவன் – மனைவி பிரச்சனையை தீர்க்க லஞ்சம் வாங்கிய பெண் காவலர் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த 19ஆம் தேதி கணவன் – மனைவி பிரச்சனையில் மனைவிக்கு சாதகமாக செயல்படுவதாக கூறி ரூ. 20,000 பெற்ற வழக்கில், கையும் களவுமாக சிக்கிய வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் அனுராதா லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனைத்த போது காவல் ஆய்வாளர் அனுராதாவின் பீரோவில் இருந்து ரூ. 7,21,000 கணக்கில் காட்டப்படாத ரொக்க பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!