‘நீ என்ன பெரிய கொக்கா’… வேன் டிரைவருக்கு பளார் விட்ட பெண் காவல் ஆய்வாளர் ; வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

Author: Babu Lakshmanan
20 March 2023, 1:43 pm

திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகரில் அறவழிப் போராட்டத்திற்கு பந்தல் போட பந்தல் உள்ளிட்ட பொருட்களை எடுத்து வந்த டிரைவரை பெண் ஆய்வாளர் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த அம்பேத்கர் நகர் பகுதியில் வீட்டுமனை பட்டா கேட்டு அறவழி போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு பந்தல் போடுவதற்காக சேர் மற்றும் சாமியான பந்தலை ஏற்றிக் கொண்டு வேன் வந்தது.

அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவல் ஆய்வாளர் சத்தியபாமா, ‘பந்தல் ஏன் எடுத்து வந்தாய்’ என்று கூறி, அந்த வேன் ஓட்டுநரின் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள், பெண் காவல் ஆய்வாளரை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டது,

இதனிடையே, இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அறவழி போராட்டத்தில் காவல்துறை பெண் ஆய்வாளர் இதுபோல் நடந்து கொண்ட சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!