அறிவுகெட்ட முட்டாளே.. உன்ன யாரு இந்த வேலைக்கு எடுத்தா : காவலரை தரக்குறைவாக பேசி லேடி ரவுடி அடாவடி.. வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
21 November 2022, 1:29 pm

திருப்பூர் ரயில் நிலையத்தில் போலீசாரிடம் அடாவடியில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனின் முதியவரிடம் செல்போனை பிடுங்கி, நீங்கள் பீடி, சிகரெட் குடிக்கிறீர்களா, தீப்பெட்டி வைத்துள்ளீர்களா நான் சேலம் கோட்ட அதிகாரி உங்களுக்கு அபராதம் விதித்து விடுவேன் எனக் கூறி 38 வயதுள்ள பெண் ஒருவர் வீடியோ எடுத்தார்.

பலர் வேடிக்கை பார்க்க, அங்கிருந்த தம்பதியினர் இளம் பெண்ணையும் வீடியோ எடுத்தார். இளம் பெண் எதிர்ப்பு தெரிவித்து நீங்கள் யார் என கேட்க, கடும் வார்த்தைகளால் அப்பெண் திட்டிள்ளார். அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அங்கு வந்த போலீஸ்காரர் கண்ணன், அப்பெண்ணிடம் விசாரணை நடத்த, கால்மேல் கால் போட்டு அமர்ந்தபடி, நான் சேலம் டிவிசன் ஆபீசர் திருப்பூர் ஸ்டேஷன் என்னோடுது, தினமும் வர்றேன். எல்லாத்தையும் புடுச்சி, புடுங்கிட்டாங்களா. என்ன வந்து விசாரிக்கிறீங்க. என்னை யாரும் எதுவும் கேட்க முடியாது, என, வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அங்கிருந்தவர்களிடம் போலீஸ்காரர் விசாரணை நடத்திக் கொண்டிருக்க, குறுக்கிட்ட அந்த உளறல் பெண், உனக்கு விசாரிக்கவே தெரியல, நீ எப்படி? வேலைக்கு வந்த, என வாய்க்கு வந்தபடி, பேசினார்.

அங்கு வந்த ரயில்வே போலீஸ் எஸ்.ஐ., லதா அப்பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்தி, அழைத்துச் சென்றனர். தன்னை ரயில்வே அதிகாரி எனக்கூறி போலீசாரிடம் சண்டையிட்ட பெண்ணால் ரயில்வே நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

  • Jayalalitha is my inspiration i will entry in politics says Varalakshmi அரசியலுக்கு வரும் பிரபல வாரிசு நடிகை… ஜெயலலிதா தான் வழிகாட்டி என பெருமிதம்!!