இன்னும் எத்தனை அதிகாரிகள் சாகப்போறாங்களோ..? கொலை செய்யப்படுவதற்கு முன்பு ஆட்சியரிடம் கெஞ்சிய அதிகாரி.. பகீர் கிளப்பும் ஆடியோ!!

Author: Babu Lakshmanan
26 April 2023, 6:07 pm

கொலை செய்யப்படுவதற்கு முன்பாக மாவட்ட ஆட்சியரிடம் கிராம நிர்வாக அலுவலர் கெஞ்சியதாகக் கூறப்படும் ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக இருந்து வருபவர் லூர்து பிரான்சிஸ் (56). இவர் நேற்று அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, கத்தி மற்றும் அறிவாளுடன் அலுவலகத்திற்கு நுழைந்த 2 நபர்கள், சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.

கிராம நிர்வாக அலுவலகத்தில் மர்ம நபர்கள் புகுந்து கிராம நிர்வாக அலுவலரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இதுகுறித்து முறப்பநாடு காவல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, போலீசார் நடத்திய விசாரணையில் மணல் கடத்தல் விவகாரம் தொடர்பாக விஏஓ லூர்து பிரான்சிஸ் போலீஸில் புகார் அளித்ததாகவும், இதன் காரணமாகவே அவரை மர்ம நபர்கள் கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸின் கொலை சம்பவத்திற்கு மாவட்ட நிர்வாகமும், சங்கத் தலைவியுமே காரணம் என்று மறவன் மடம் பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் பிரேமலதா கண்ணீருடன் குற்றம்சாட்டும் ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த ஆடியோவில், நேற்று படுகொலை செய்யப்பட்ட முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் தன்னுடைய உயிருக்கு ஆபத்து உள்ளது என்று மாவட்ட ஆட்சியரிடம் தனக்கு பணி மாறுதல் கேட்டுள்ளார். அப்போது, அவரது கோரிக்கை மீது மாவட்ட ஆட்சியர் உரிய கவனம் செலுத்தவில்லை. அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்காமல் வேண்டுமென்றே திருவைகுண்ட வட்டத்திலே மணல் கொள்ளை நடந்து வரும் பகுதியிலே பணி வாய்ப்பு வழங்கியுள்ளார்.

தூத்துக்குடி வட்டத்திற்கு பணி மாறுதல் கேட்டு கெஞ்சிய போது மறுக்கப்பட்டுள்ளது. படுகொலைக்கு மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் தான் காரணம்,” என அவர் கூறுகிறார். இந்த ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 458

    0

    0