22 ஆண்டுகளுக்கு பிறகு பிரசாந்துடன் ஜோடி சேரும் பிரபல நடிகை- வைரலாகும் வீடியோ..!

Author: Rajesh
13 April 2022, 7:04 pm

தமிழ் சினிமாவில் ‘வைகாசி பொறந்தாச்சு’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி பிரபலமடைந்தார் தான் நடிகர் பிரசாந்த். அதன்பின் தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்து வந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் அவ்வளவாக மக்களை கவராததால் திரைத்துறையை விட்டு சற்று விலகி இருந்தார்.

இருப்பினும் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது நடிகர் பிரசாந்த்’அந்தகன்’என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நெறுங்கிவிட்ட நிலையில், முக்கிய கேரக்டரில் நடிகை லைலா ஒப்பந்தமானார்.

இவர் கடந்த 2000ம் ஆண்டு வெளியான ‘பார்த்தேன் ரசித்தேன்’ என்ற திரைப்படத்தில் பிரசாந்த் ஜோடியாக நடித்திருந்தார். அதன் பின்னர் 22 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் பிரசாந்துடன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரசாந்துடன் இணைந்து நடித்த ஒரு காட்சியின் வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட லைலா, அதில் ‘பார்த்தேன் ரசித்தேன்’ படத்தின் பாடலை பின்னணியில் ஒலிக்க விட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு தற்போது லைக்ஸ் குவிந்து வருகிறது.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!