ரவுடி வீட்டில் லட்சம் லட்சமாக பணம்… 67 சவரன் நகை : ஆட்டத்தை ஆரம்பித்த எஸ்பி… உள்ளே வந்த ஐ.டி!

Author: Udayachandran RadhaKrishnan
30 September 2024, 6:48 pm
Quick Share

திருச்சியில் பிரபல ரவுடி வீட்டில் கட்டு கட்டாக பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ஐடி அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், மாநகர் பகுதி, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கட்ட பஞ்சாயத்தில் ஈடுபட்டு பொதுமக்களின் நிலங்களை அபகரித்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் திருச்சி மாநகர காவல் ஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் உத்தரவின் பேரில் “ஆபரேஷன் அகழி” என்ற பெயரில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 14 தனிப்படை அமைக்கப்பட்டது

திருச்சி கே கே நகர் அருகே திருவள்ளுவர் தெருவில் ஆபரேஷன் அகழி சோதனையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் தலைமையிலான தனிப்படை ஈடுபட்டது.

ஏற்கனவே நில உரிமையாளர்களிடமிருந்து ஆவணங்களை அபகரித்து மிரட்டி பணம் சம்பாதித்த செந்தில், அண்ணாமலை இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

அதில் அண்ணாமலை தலைமறைவாகியுள்ளார். இந்த நிலையில் அவரது பெண் சிநேகிதி தனிப்படை சோதனையில் ஈடுப்பட்டது. வீட்டில் லட்சக்கணக்கில் கட்டுக் கட்டாக பணம் நகைகள் இருந்ததால் வருமான வரித்துறையை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் அழைத்தார்.

வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை தொடர்ந்தனர். சோதனையில் பணம் ரூ 18 லட்சத்து 92 ஆயிரத்து 750, 70சவரன் தங்க நகைகளும், 17 பத்திர ஆவணங்கள் சேர்த்து 70லட்ச ரூபாய் மதிப்புள்ளவைகளை பறிமுதல் செய்தனர்.

கடந்த வாரம் கொட்டப்பட்டு செந்தில் மற்றும் அண்ணாமலை இருவர் மீதும் மிரட்டல் மற்றும் போலியாக நில பத்திரங்களை தயாரிப்பது கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு பணம் பறிப்பது உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் மணிகண்டம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

(191(2),191(3),296(b),351(3) r/w 4 of WH Act & 25(1-B)(a) Arms Act) அண்ணாமலை நில பத்திரங்கள் குறித்து மிரட்டும் ஆடியோவும் வெளியாகி பரபரப்பு உள்ளாக்கியது.

அண்ணாமலை தொடர்ந்து தலைமறைவாகியுள்ளார்.கொட்டப்பட்டு செந்தில் மீது பல்வேறு மிரட்டல் வழக்குகள் உள்ளது.

சரித்திர பதிவேடு குற்றவாளி அண்ணாமலை மீதும் மிரட்டுதல், ஏமாற்றுதல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணாமலையை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தொடர்கிறது.

மேலும் நில உரிமையாளர்கள் தங்களுடைய நிலங்களை யாரும் அபகரித்தால், குற்றவாளிகள் நேரடியாகவோ, தொலைபேசி மூலமாக , மிரட்டினாலோ அவற்றை ஆடியோ, வீடியோ , மற்றும் சிசிடிவி ஆதாரங்களுடன் புகார் அளிக்குமாறும் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் அவர்களின் உதவி கைபேசி எண்ணுக்கு +91 94874 64651 தொடர்பு கொள்ளலாம் என அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

  • sivakarthikeyan-updatenews360அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் – செம லவ்வா இருக்கே – வீடியோ!
  • Views: - 418

    0

    0