தடுப்பு சுவர் கட்டும் போது மண் சரிவில் சிக்கி 6 பேர் பலி : கட்டிடத்திற்கு சீல்.. நில உரிமையாளர் உட்பட 4 பேர் கைது..!!!

Author: Udayachandran RadhaKrishnan
7 February 2024, 8:14 pm

தடுப்பு சுவர் கட்டும் போது மண் சரிவில் சிக்கி 6 பேர் பலி : கட்டிடத்திற்கு சீல்.. நில உரிமையாளர் உட்பட 4 பேர் கைது..!!!

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே லவ்டேல் பகுதியில் பிரிட்ஜோ என்பவருக்கு சொந்தமான நிலத்தில் ஒரு சொகுசு பங்களா கட்டப்பட்டு வந்தது. இதன் அருகே சுமார் 20 அடி உயரத்திற்கு தடுப்புச் சுவர் அமைக்கும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்துள்ளது. இதற்காக மண்ணை தோண்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்த கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தின் அருகே பழைய பயன்படாத நகராட்சி கழிப்பிட கட்டிடம் இருந்துள்ளது. இந்நிலையில் இன்று கட்டுமானப் பணியின்போது எதிர்பாராத விதமாக மண்சரிவு ஏற்பட்டு கழிப்பிட கட்டிடம் சரிந்து விழுந்தது. இதனால் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மண்சரிவில் சிக்கிக் கொண்டனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 6 பெண்கள் உயிரிழந்த நிலையில், 4 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர். இதன்படி நிலத்தின் உரிமையாளர் பிரிட்ஜோ, காண்டிராக்டர் பிரகாஷ், மேஸ்திரிகள் ஜாகிர் அகமது மற்றும் ஆனந்தராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கட்டடித்திற்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்