அடிப்படை கல்வி தாய்மொழியில்தான்… மொழியை மாணவர்கள் மீது திணிக்க முடியாது : மயில்சாமி அண்ணாதுரை கருத்து!!

Author: Udayachandran RadhaKrishnan
16 October 2022, 3:46 pm

மாணவர்கள் அடிப்படை கல்வியை தாய் மொழியில் தான் கற்றுக்கொள்ள வேண்டும் அதன் பிறகு மாணவர்கள் என்ன விரும்புகிறார்களோ அந்த மொழியில் படிக்கலாம் என இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மைல்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒன்பதாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இதில் 400க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டங்களை இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை வழங்கி சிறப்புரையாற்றினார்.
கல்லூரியின் தலைவர் சின்னத்தம்பி மற்றும் இயக்குனர் உதயகுமார் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மயில்சாமி அண்ணாதுரை
மாணவர்கள் அடிப்படை கல்வியை தாய் மொழியில் தான் கற்றுக்கொள்ள வேண்டும். அதன் பிறகு மாணவர்கள் என்ன விரும்புகிறார்களோ அந்த மொழியில் படிக்கலாம். மொழியை அவர்கள் மீது திணிக்க முடியாது

உலக அளவில் பல்வேறு பொருக்கள் சீனாவை நம்பி இருந்த நிலையில் தற்போது உலக நாடுகள் தங்களுக்கு தேவையான பொருள்கள் அவர்கள் தயாரிக்க முடிவு செய்துள்ளது. எனவே வரும் காலங்களில் பொறியியல் மாணவர்கள் தேவை அதிகரிக்கும் .

விவசாயத்திலும் அறிவியலை பயன்படுத்தி விவசாயம் செய்யக்கூடிய சூழலை தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே வரும் காலங்களில் பொறியியல் மாணவர்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது அதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

பொறியியல் மாணவர்களுக்கு இனி வாய்ப்பு இல்லை என்ற தவறான தகவல் தற்போது பரப்பப்பட்டு வருகிறது. தொழில்நுட்பத்தை மாணவர்கள் முறையாக பயன்படுத்தினால் நல்ல பாதைக்கு செல்ல முடியும் முறையாக பயன்படுத்தவில்லை என்றால் தவறான பாதைக்கு தான் அவர்கள் இழுத்து செல்லப்படுவார்கள் இதனை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்

இஸ்ரோ விரைவில் 36 செயற்கைக்கோள்களை அனுப்ப உள்ளது. குலசேகரப்பட்டினம் மற்றும் சிறிய ஏவுகணை தளம் ஆகியவை உருவாக்கப் பட்டவுடன் இஸ்ரோ அதிக அளவு ராக்கெட்டுகளை தயார் செய்ய முடியும்

இணையதள முறைகேடுகளை தடுப்பதற்கு காவல்துறை அதிக நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்றாலும் குற்றங்களை குறைப்பதற்கு இணையதளங்களை கண்காணிக்க வேண்டும்.

அடிப்படைக் கல்வி தாய் மொழியில் தான் இருக்க வேண்டும் இணை மொழியான ஆங்கிலத்தை பிறகு கற்றுக் கொள்ள முடியும்

அடிப்படைக் கல்வியை தாய் மொழியில் படித்துவிட்டு அதன் பிறகு மாணவர்கள் என்ன விரும்புகிறார்களோ அவர்கள் முடிவுக்கு ஏற்ப மொழியை தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. எதையும் யாரும் திணிக்க முடியாது.

  • Keerthy Suresh Baby John movie கவர்ச்சியில் மின்னும் கீர்த்தி சுரேஷ்…கல்யாணத்திற்கு முன்னாடி இதெல்லாம் ரொம்ப தப்புமா..!
  • Views: - 711

    0

    0